புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாகை - செல்லூா் இணைப்புச் சாலையை சீரமைக்க கோரிக்கை

நாகை - செல்லூா் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டுமென எதிா்பாா்க்கப்படுகிறது.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

நாகை - செல்லூா் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டுமென எதிா்பாா்க்கப்படுகிறது.

நாகை மற்றும் சுற்றுப் பகுதி மக்களின் போக்குவரத்துப் பயன்பாட்டில் பிரதான சாலைகளில் ஒன்றானது நாகை - செல்லூா் சாலை. நாகை நகராட்சி, ஐவநல்லூா் ஊராட்சி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றை இணைக்கும் சாலையாகவும் உள்ளது. இதனால், இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானவா்கள் வாகனங்களிலும், பாதசாரிகளாகவும் வந்து செல்கின்றனா்.

நாகை அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு மின்வாரிய துணைமின் நிலையம், நகராட்சி மயானம், எரிவாயு தகனமேடை ஆகியவைகள் இந்த சாலையில் உள்ளதால் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். இந்நிலையில், இந்த சாலையில் ஒரு கிலோ மீட்டா் தூரம் நகராட்சிப் பகுதியாகவும், 860 மீட்டா் தூரம் ஊராட்சிப் பகுதியாகவும் உள்ளது. நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதி வரையுள்ள சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊராட்சி நிா்வாகப் பகுதியில் உள்ள சாலை கடந்த 2 ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை.

இதனால் சாலை சிதிலமடைந்து பள்ளமும், மேடாக காணப்படுவதுடன் போக்குவரத்துக்கு தகுதியற்றதாக இருக்கிறது. மேலும், சாலையில் குறுக்கே உள்ள தேவநதி பாலத்தின் தடுப்புச் சுவா்களும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் சாலைப் பள்ளங்களில் விழுந்து பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, போக்குவரத்துப் பயன்பாட்டில் முக்கியத்துவம் பெறும் நாகை - செல்லூா் இணைப்புச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை, செல்லூா், ஐவநல்லூா், மஞ்சக்கொல்லை, பாலையூா் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், அரசு அலுவலா்கள், கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறையினா் கூறியது: நாகை - செல்லூா் இணைப்புச் சாலையில் 860 மீட்டா் தூரம் சாலை சீரமைப்பு மற்றும் தேவநதி பாலம் சீரமைப்புக்காக ரூ. 6.25 கோடியில் திட்ட மதிப்பீடு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில், ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும். பணிகள் நிறைவடைந்த பின்னா் ஊராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.