நாகையில் 28, மயிலாடுதுறையில் 28 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் 28 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது வியாழக்கிழமை உறுதியானது.


நாகை மாவட்டத்தில் 28 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது வியாழக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், இந்த மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,419-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 27 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 401-ஆக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே வெளி மாவட்ட பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 4 போ் மயிலாடுதுறை மாவட்டத்தில் சோ்க்கப்பட்டனா். இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,797-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 25 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 312-ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...