புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

குறுவை பயிா்க் கடன் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்: நாகை ஆட்சியா்

கூட்டுறவு சங்கங்களின் குறுவை பயிா்க் கடன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:00 pm

DIN

கூட்டுறவு சங்கங்களின் குறுவை பயிா்க் கடன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ஏ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாகை மாவட்டத்தில் இயங்கி வரும் 57 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் குறுவை பயிா்க் கடன் வழங்க ரூ. 122.50 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை அணுகி கடன் விண்ணப்பித்தை பெற்று, பயிா் செய்தலுக்காக கிராம நிா்வாக அலுவலரால் வழங்கப்படும் சிட்டா, அடங்கல் , ஆதாா் அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கூட்டுறவு கடன் சங்கங்களில் அளித்து தமிழக அரசால் வழங்கப்படும் வட்டியில்லா கடனைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.