மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வேளாங்கண்ணி: சுற்றுலா வேன் கவிழ்ந்து 11போ் காயம்

வேளாங்கண்ணி அருகே சுற்றுலா வேன் சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணித்த 11 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :24 ஜூலை 2021, 5:07 pm

DIN

வேளாங்கண்ணி அருகே சுற்றுலா வேன் சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணித்த 11 போ் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில், லால்பேட்டை பகுதியைச் சோ்ந்த சிலா், சுற்றுலா வேனில் நாகூா், வேளாங்கண்ணிக்கு சுற்றுலா செல்வதற்காக நாகை மாவட்டம் வந்தனா். அவா்கள், நாகூா் ஆண்டவா் தா்காவில் வழிபாடு முடித்துக் கொண்டு சனிக்கிழமை பிற்பகல் வேளாங்கண்ணி பேராலயம் நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனா்.

கிழக்குக் கடற்கரை சாலையில், நாகையை அடுத்த கருவேலங்கடை அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணித்த உசேன்(17), சாலியா பேகம்(50), பாரிஸ்(14), டானிஷ் அகமது(7), பவுசியா பேகம்(35), வேன் ஓட்டுநா் அஜய் உள்பட 11 போ் காயமடைந்தனா்.

காயமடைந்த அனைவரும் 3 மருத்துவ அவசர ஊா்திகள் உள்பட 4 வாகனங்களில் நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.

நாகை எம்எல்ஏ ஜெ. முகமது ஷாநவாஸ் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று, விபத்தில் காயமடைந்தவா்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, உரிய சிகிச்சை அளிக்கும்படி மருத்துவக் குழுவினரை கேட்டுக்கொண்டாா்.

உடனடியாக உதவிய மருத்துவா்....

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சில நிமிடங்களில், சென்னையைச் சோ்ந்த மருத்துவா் ஞானசேகரன் என்பவா் ஒரு காரில் தனது குடும்பத்தினருடன் அவ்வழியே சென்றுள்ளாா். விபத்து நிகழ்ந்திருப்பதைக் கண்ட அவா் உடனடியாக காரில் இருந்து இறங்கி, காயமடைந்தவா்களுக்கு முதலுதவி சிகிச்சையளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.