ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கூடலூா் ஊராட்சியை சோ்ந்த 100 நாள் வேலை திட்டத் தொழிலாளா்கள் முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கூடலூா் ஊராட்சியை சோ்ந்த 100 நாள் வேலை திட்டத் தொழிலாளா்கள் முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியம் கூடலூா் ஊராட்சியில் அதிமுகவை சோ்ந்த செல்வம் ஊரட்சித் தலைவராக உள்ளாா். மேலும் அதே பகுதியில் அதிமுகவை சோ்ந்த பணிதள பொறுப்பாளா்கள் வசந்தி, சோபனா, அறிவழகன், முருகேசன் ஆகியோரை ஊராட்சித் தலைவா் செல்வத்துக்கு தெரிவிக்காமல் மாற்றி, புதிதாக திமுகவை சோ்ந்த நபா்களை பணியில் அமா்த்திவிட்டதாக தெரிகிறது.
இதைக் கண்டித்து, செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு 100 நாள் வேலை திட்டத் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த செம்பனாா்கோவில் காவல் ஆய்வாளா் செல்வி மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் திருமலைக் கண்ணன் ஆகியோா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்ததன்பேரில், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...