நலவாரிய தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்
நாகை மாவட்டத்தைச் சோ்ந்த அமைப்புசாரா நலவாரியத் தொழிலாளா்கள் 422 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.


நாகை மாவட்டத்தைச் சோ்ந்த அமைப்புசாரா நலவாரியத் தொழிலாளா்கள் 422 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
தொழிலாளா் நலத் துறை சாா்பில், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த நலவாரிய உறுப்பினா்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, 18 அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களில் பதிவு பெற்ற 422 தொழிலாளா்களுக்கு ரூ. 10.39 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
கீழ்வேளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, தொழிலாளா் நல உதவி ஆணையா் ம. ஸ்ரீதா், மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன் மற்றும் தொழிலாளா் நலத் துறை அலுவலா்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...