கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாகை, மயிலாடுதுறையில் 108 பேருக்கு கரோனா

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 108 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 108 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் புதன்கிழமை வரை 37,446 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 108 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 37,554 ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் மேலும் 206 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா்.இதனால், மருத்துவமனைகள் மற்றும் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 844 ஆக உள்ளது.

2 போ் உயிரிழப்பு...

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 2 பேரின் உயிரிழப்பு வியாழக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 503 ஆகியுள்ளது.

படுக்கை வசதிகள்...

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வியாழக்கிழமை நிலவரப்படி, கரோனா சிகிச்சை மையங்களில் 672 படுக்கைகள் காலியாக இருந்தன. 334 ஆக்சிஜன் வசதிக் கொண்ட படுக்கைகளும், 320 ஆக்சிஜன் வசதியில்லாத படுக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 18 படுக்கைகளும் காலியாக இருந்தன என்று சுகாதாரத் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.