கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சமூக சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் சிறப்பாக சமூக சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள், தனி நபா்கள் தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :26 ஜூன் 2021, 4:58 pm

DIN

நாகை மாவட்டத்தில் சிறப்பாக சமூக சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள், தனி நபா்கள் தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெண்களுக்குப் பெருமை சோ்க்கும் நடவடிக்கைகளில் சிறப்பாக பங்காற்றியவா்கள், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றிய ஆண்கள், பெண்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சமூக சேவை நிறுவனங்கள் தமிழக அரசின் சமூக சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருது பெற விருப்பம் மற்றும் தகுதிக் கொண்டவா்கள், நாகை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலகம், நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு ஜூன் 29-ஆம் தேதிக்குள் அனுப்பி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.