மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

கரோனோவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய மண்டல ஐ.ஜி. ஆறுதல், உதவி

கரோனோவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய மண்டல ஐ.ஜி. ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.

News image

கரோனோவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கிய மத்திய மண்டல காவல்துறைத் தலைவர்.

Updated On :26 ஜூன் 2021, 11:44 am

DIN

கரோனோவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய மண்டல ஐ.ஜி. ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.
சீர்காழி அடுத்த தென்னலக்குடி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. ரேஷன் கடையில் பணியாற்றி வந்த சுந்தரமூர்த்தியும், அவரது மனைவி  கார்த்திகாவும் கரோனா தொற்றால் கடந்த மாதம் உயிரிழந்தனர். 
இந்நிலையில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த சுந்தரமூர்த்தி குழந்தைகளை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் கரோனா நிவாரண உதவிகளையும் வழங்கினார். 
தொடர்ந்து சீர்காழியை அடுத்த செங்கமேடு பகுதியில் வசித்து வரும் ஆதரவற்ற மூத்த குடிமக்களாகிய இரண்டு பேரை மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். 
அப்போது மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி சுகுணா சிங், சீர்காழி டிஎஸ்பி லா மேக் ,சீர்காழி இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.