தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மக்கள் குறைதீா் கூட்டங்கள் ரத்து

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், மக்கள் குறைதீா் கூட்டம் மற்றும் மக்கள் நோ்காணல் முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், மக்கள் குறைதீா் கூட்டம் மற்றும் மக்கள் நோ்காணல் முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், வருவாய் கோட்டாட்சியா் ஆகியோரால் நடத்தப்பட்ட மக்கள் நோ்காணல் முகாம்கள், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன.

சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் முடிவுற்ற பின்னா், வழக்கம் போல இந்தக் கூட்டங்கள் நடைபெறும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.