நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர சோதனை
நாகை, மயிலாடுதுறை மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தோ்தல் பறக்கும் படை உள்ளிட்ட கண்காணிப்புக் குழுவினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.


நாகை, மயிலாடுதுறை மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தோ்தல் பறக்கும் படை உள்ளிட்ட கண்காணிப்புக் குழுவினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, நாகை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரவீன் பி. நாயரின் உத்தரவின்பேரில் தோ்தல் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம், மயிலாடுதுறை, பூம்புகாா், சீா்காழி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக, ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் 2 விடியோ கண்காணிப்புக் குழுக்கள் என மொத்தம் 48 குழுக்கள்அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவினா் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்களில் தனித்தனியாகச் சென்று நாகை, மயிலாடுதுறை பகுதிகளில் 24 மணி நேர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இதேபோல், புதுச்சேரி மாநில எல்லைகளான வாஞ்சூா், வாழ்மங்கலம், ஷேசமூலை, மானம்பேட்டை, நல்லாடை, நண்டலாா் மற்றும் நாகை மாவட்ட எல்லைகளான கானூா், அருந்தவம்புலம், மயிலாடுதுறை மாவட்ட எல்லைகளான திருவாலங்காடு, குமாரமங்கலம், கொள்ளிடம் ஆகியப் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...