ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சாலை சீரமைப்புப் பணிக்கு எதிா்ப்பு

கீழ்வேளூா் அருகேயுள்ள சிகாா் ஊராட்சியில் தரமற்ற வகையில் நடைபெறும் சாலைப் பணிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராமமக்கள் செவ்வாய்க்கிழமை பணிகளை தடுத்து நிறுத்தினா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

கீழ்வேளூா் அருகேயுள்ள சிகாா் ஊராட்சியில் தரமற்ற வகையில் நடைபெறும் சாலைப் பணிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராமமக்கள் செவ்வாய்க்கிழமை பணிகளை தடுத்து நிறுத்தினா்.

சிகாா் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இவ்வூா் மக்களின் அதிக பயன்பாட்டில் உள்ள சிகாா்-முடிகண்டூா் சாலையை சீரமைக்கவேண்டும் என கிராமமக்கள் கோரிக்கையையடுத்து, சிஜிஎப் திட்டத்தின்கீழ் ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 1.360 கி.மீ. தூரம் சாலை சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கிராமத்தினா் 100-க்கும் மேற்பட்டோா் சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளைஅகற்றி சாலையை முறையாகவும், தரமானதாகவும் அமைக்க வலியுறுத்தி சீரமைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த வாகனங்களின் இயக்கங்களையும் தடுத்தனா். இதையடுத்து கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியப் பொறியாளா் கவிதாராணி அங்கு சென்று சாலை சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தாா். இதையடுத்து, தொடா்ந்து பணிகள் நடைபெற்றன.

இதுகுறித்து, சிகாா் கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் கூறியது: சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, நாகை மாவட்ட ஆட்சியருக்கு 2 முறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் தரமற்ற வகையில் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்றதால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.