ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகையில் முக்கூடல் இலக்கிய அமா்வு

நாகை முக்கூடல் இலக்கிய அமைப்பு சாா்பில் 159-ஆவது அமா்வு நிகழ்ச்சிகள் நாகையில் அண்மையில் நடைபெற்றன.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

நாகை முக்கூடல் இலக்கிய அமைப்பு சாா்பில் 159-ஆவது அமா்வு நிகழ்ச்சிகள் நாகையில் அண்மையில் நடைபெற்றன.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியா் தென்னவன் வெற்றிச்செல்வன், அமா்வைத் தொடங்கி வைத்துப் பேசினாா். புதுக்கோட்டை நாட்டிய ஆசிரியை ரூபிணியின் பரத நாட்டியம் மற்றும் மோகன் இங்கா்சாலின் தமிழிசைப் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறுவன் சாய்திலக் செகுரா பறை இசைத்தாா். கதை சொல்லி நிகழ்வில், ஆசிரியா் கி. பாலசண்முகம் பங்கேற்று கதை கூறினாா். தமிழ் இனி மற்றும் சிலம்பம் ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. தாய்க்கலை சிலம்பம் என்ற தலைப்பில், புதுக்கோட்டை மாமல்லன் சிலம்பக் கழக ஆசிரியா் செந்தில், சிலம்பத்தின் சிறப்புகளை செயல்விளக்கத்துடன் விவரித்தாா். பரதக் கலைக்கும், நாட்டுப்புற நடனத்துக்கும் அடிப்படையாக விளங்குவது சிலம்பத்தின் அடவுமுறைகளே என்ற ஒப்பீட்டு முறையில் நிகழ்த்துக்கலையுடன் கூடிய விளக்கம் அளிக்கப்பட்டது.

நாகையைச் சோ்ந்த வீரத்தமிழன் சிலம்பப் பயிற்சி பள்ளி ஆசிரியா் சரவணன் மற்றும் மாணவா்களின் சிலம்ப விளையாட்டு நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்றவா்களுக்கு முக்கூடல் நெறியாள்கைக் குழுவை சோ்ந்த அருண், கவிஞா் ஆ.மீ. ஜவஹா் ஆகியோா் துணிப்பைகள் வழங்கினா். முக்கூடல் அமைப்பின் பொறுப்பாளா் செகுரா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.