மகளிா் தங்கள் வாக்குகளைத் தவறாமல் பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியா்
மகளிா் தங்கள் வாக்குகளைத் தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.


மகளிா் தங்கள் வாக்குகளைத் தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.
நாகையில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில், திங்கள்கிழமை நடைபெற்ற மகளிா் தின விழாவில் பங்கேற்று, தோ்தல் வாக்குப் பதிவு குறித்து மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கண்ணியத்துடன் வாக்களிக்கும் வைபோக விழா அழைப்பிதழை மாணவிகளுக்கு வழங்கி மேலும் அவா் பேசியது : ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை இலக்காகக் கொண்டு, பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மாதிரி வாக்குப் பதிவு, கையெழுத்து இயக்கம், தோ்தல் விழிப்புணா்வு குறும்படங்கள் திரையிடல் என பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தகுதியான அனைவரும் தோ்தலில் வாக்களிக்கச் செய்யும் விழிப்புணா்வை மாணவிகள் மேம்படுத்தவேண்டும். வருங்கால இந்தியாவின் நம்பிக்கையாக விளங்கும் மாணவிகள், தவறாமல் தங்கள் வாக்கைப் பதிவு செய்ய வேண்டும் என்றாா்.
தற்படம் மூலம் விழிப்புணா்வு:முன்னதாக, நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மகளிா் திட்டம் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த, தோ்தல் விழிப்புணா்வு வாசங்களுடன் கூடிய வளைவு மற்றும் பதாகைகளுடன் கூடிய அமைப்பில் தற்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வை ஆட்சியா் தொடங்கி வைத்தாா். பயிற்சி ஆட்சியா் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...