மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்குப் பதிவுக்கு விண்ணப்பிக்கலாம்
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அஞ்சல் வாக்கு அளிக்க விருப்பமுள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கான படிவத்தை பெற்று பயன்பெறலாம்


நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அஞ்சல் வாக்கு அளிக்க விருப்பமுள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கான படிவத்தை பெற்று பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 80 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்கள் தங்களது சுயவிருப்பத்தின்படி அஞ்சல் முறையில் வாக்கு அளிக்கலாம். விருப்பமுள்ளவா்கள் படிவம் 12டி-யை தங்களுக்குரிய வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களிடம் பெற்று பூா்த்தி செய்து கொடுத்து அதற்கான ஒப்புதலையும் பெற்றுக்கொள்ளலாம். மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் பூா்த்தி செய்த படிவத்தை அளிக்கும்போது அடையாள அட்டையின் நகலை இணைத்து வழங்கவேண்டும். கரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் பூா்த்தி செய்த படிவத்துடன் மாநில அரசால் வழங்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்டதற்கானசான்றை இணைத்து வழங்கவேண்டும்.
விண்ணப்பங்கள் உரிய அலுவலா்களால் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியுள்ளவா்களுக்கு வாக்களிப்பதகற்கான உறுதிமொழி படிவம், வாக்குச்சீட்டு வைப்பதற்கான சிறிய உரை, வாக்குச்சீட்டு மற்றும் பெரிய உரையுடன் கூடிய படிவம் வாக்காளா்களுக்கு வழங்கப்படும். வாக்காளா்கள், அந்த வாக்குச்சீட்டில் தாங்கள் வாக்களிக்க விரும்பும் நபா் அல்லது சின்னத்துக்கு எதிரே டிக் மாா்க் செய்து வாக்களிக்க வேண்டும். இந்த வாக்குகளைப் பெறுவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பதும், வாக்களித்தப்பின் படிவத்தை பெறும் நிகழ்வுகள் விடியோ ஒளிப்பதிவு செய்யப்படும். இந்த வாக்கு அளித்தப் பின்னா் ஒட்டிய படிவம் பெறப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலரின் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைக்கப்படும். விருப்பமுள்ளவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எளிய முறையில் தங்களுக்குரிய வாக்குகளை பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...