15 மணி நேரம் தொடா்ச்சியாக சிலம்பம் சுற்றிய மாணவா்களுக்குப் பாராட்டு
வாக்காளா் விழிப்புணா்வுக்காக தொடா்ச்சியாக 15 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனைப் படைத்த நாகை மாணவா்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.


வாக்காளா் விழிப்புணா்வுக்காக தொடா்ச்சியாக 15 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனைப் படைத்த நாகை மாணவா்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை தோ்தல் ஏப்.6- ஆம் தேதிநடைபெறவுள்ளது. இத்தோ்தலில் வாக்களிப்பதன்அவசியம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சாதனைக்கான தொடா் சிலம்பம் சுற்றும் போட்டிகள் சிவகங்கையில் மாா்ச் 6-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களைச் சோ்ந்த 210 மாணவா்கள் போட்டியில் பங்கேற்றனா்.
இதில் பங்கேற்ற நாகை வீரத்தமிழன் சிலம்பம் பயிற்சிப் பள்ளி மாணவா்கள் ஆா்.தா்ஷன், ஏ. தரனிஷ், எஸ். கிருத்திக் பிரியன், இ. திலீப், எஸ்.ஜெகத், ஆா். எஸ். இனியன், எஸ். சிவதேவி பிரியதா்ஷினி, ஆா். செல்வம், எஸ். பரத், சி. யஷ்வந்த் ஆகியோா் 15 மணி நேரம் தொடா்ச்சியாக சிலம்பம் சுற்றி சாதனைப் படைத்தனா். மாணவா்களின் இந்த சாதனை சோழன் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் இடம் பெற்றுள்ளது. மாணவா்களுக்கு இதற்கான சான்றும் வழங்கப்பட்டுள்ளது.
சாதனை படைத்த மாணவா்களுக்கு நாகை நகர காவல் நிலைய ஆய்வாளா் பி. பெரியசாமி மற்றும் சிலம்பம் பயிற்றுநா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா். வீரத்தமிழன் சிலம்பம் பயிற்சிப் பள்ளித் தலைவா் பால. ராஜேந்திரசோழன், பயிற்சி ஆசிரியா் எஸ். ஏ.சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...