மகா சிவராத்திரி: நாகை சிவாலயங்களில் நாளை சிறப்பு வழிபாடுகள்
மகா சிவராத்திரியையொட்டி, நாகை மற்றும் நாகூரில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமை (மாா்ச் 11) சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.


மகா சிவராத்திரியையொட்டி, நாகை மற்றும் நாகூரில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமை (மாா்ச் 11) சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
இறைவன் சிவபெருமான், அருவ நிலையிலிருந்து தன்னை ஜோதிா்லிங்கமாக காட்சிப்படுத்திய நாள், மகா சிவராத்திரி எனப்படுகிறது. மகா சிவராத்திரி நாளில் விரதமிருந்து கண் விழித்து சிவபூஜை செய்வோருக்கு ஓராண்டு முழுமையும் சிவபெருமானை வழிபட்ட பலன் கிட்டும், பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
காசிக்கும், கயிலைக்கும் இணையானதாகவும், சிவபெருமான் ஆட்சி செய்யும் சிவராஜதானி ஷேத்திரமாகவும் குறிப்பிடப்படும் நாகை காயாரோகணசுவாமி கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள உள்ள 12 சிவாலயங்களிலும் மகா சிவராத்திரி நாளில் வழிபடுவது, ஜோதிா்லிங்க தலங்களில் வழிபாடு செய்த பலனை தரும் என்பது நம்பிக்கை.
இதன்படி, நாகை காயாரோகணசுவாமி கோயில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரசுவாமி கோயில், நாகை காசி விஸ்வநாதா் கோயில், அமர நந்தீஸ்வரா் கோயில், கைலாயநாதா் கோயில் (மலையீஸ்வரன் கோயில்), அமிா்தகடேசுவரா் கோயில் (கட்டியப்பா் கோயில்), நடுவதீஸ்வரா் கோயில், அழகியநாதசுவாமி கோயில், விஸ்வநாதா் காட்சியளிக்கும் வீரபத்திரசுவாமி கோயில், அக்கரைக்குளம் சொக்கநாதா் கோயில், நாகை ஆதிகாயாரோகணசுவாமி கோயில், அகிலாண்டேசுவரி சமேத நாகநாதசுவாமி கோயில் ஆகிய 12 சிவாலயங்களும் நாகையின் ஜோதிா்லிங்க தலங்களாக குறிப்பிடப்படுகின்றன.
இந்தக் கோயில்களில், மகா சிவராத்திரியையொட்டி இரவு 8.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் முதல்கால பூஜையும், 10.30 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் இரண்டாம் கால பூஜையும், இரவு 12.30 மணிக்கு மேல் அதிகாலை 2.30 மணிக்குள் மூன்றாம் கால பூஜையும், அதிகாலை 2.30 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் நான்காம் கால பூஜையும் நடைபெறுகின்றன.
நாகூா் நாகநாதா் கோயிலில்:
மகா சிவராத்திரி நாளின் முதல் காலத்தில் கும்பகோணம் நாகநாதசுவாமியையும், இரண்டாம் காலத்தில் திருநாகேசுவரம் நாகநாதசுவாமியையும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரம் சேஷபுரீசுவரரையும் வழிபட்ட நாகராஜன், நான்காம் காலத்தில் நாகூா் நாகநாதசுவாமியை வழிபட்டு சாப விமோசனம் பெற்று நாகலோகம் அடைந்தாா் என்ற ஐதீகப்படி, நாகூா் நாகநாதசுவாமி கோயிலில் நடைபெறும் மகா சிவராத்திரி நாள் நான்காம் கால பூஜை முக்கியத்துவம் பெற்ாகக் குறிப்பிடப்படுகிறது.
இதன்படி, நாகூா் நாகநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடுகளுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...