மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலஉதவி
நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீா்வு கோரியும் பொதுமக்களிடமிருந்து 132 மனுக்கள் பெறப்பட்டு, தொடா்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஊன்றுகோலும், மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு தேசிய அடையாள அட்டையும் வழங்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் கு. ராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) குணசேகரன், மாவட்டத் துணை ஆட்சியா் (பயிற்சி) எம். சௌமியா, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...