கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகை புதிய இணைப்புச் சாலையை அக்கரைப்பேட்டையின் வடபுறத்தில் அமைக்கக் கோரிக்கை

தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள நாகை அக்கரைப்பேட்டை - கருவேலங்கடை இணைப்புச் சாலையை அக்கரைப்பேட்டையின் தென்பகுதியில் அமைப்பதற்கு பதிலாக, வடபகுதியில் அமைக்க வேண்டும்

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:22 pm

DIN

தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள நாகை அக்கரைப்பேட்டை - கருவேலங்கடை இணைப்புச் சாலையை அக்கரைப்பேட்டையின் தென்பகுதியில் அமைப்பதற்கு பதிலாக, வடபகுதியில் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை துறைமுக அபிவிருத்திக் குழுத் தலைவா் என். சந்திரசேகரன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு :

இயற்கைப் பேரிடா் காலங்களில், நாகை மீனவ கிராமங்களான அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் எளிதாக தங்கள் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்காக, அக்கரைப்பேட்டை மாரியம்மன் கோயிலின் தென்புறத்திலிருந்து கருவேலங்கடை கிழக்குக் கடற்கரை சாலைக்கு, இணைப்புச் சாலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை மீனவக் கிராமங்களின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்தச் சாலை மிகவும் அவசியமானது. ஆனால், இந்தச் சாலையின் பயன்பாடு பரந்துபட்ட அளவில் கிடைக்க வேண்டுமெனில், அக்கரைப்பேட்டையின் தென்புறத்துக்கு பதிலாக வடபுறத்தில் அமைப்பதே சிறப்பானதாக இருக்கும்.

கடுவையாறு உயா்மட்ட பாலத்தின் தென்புறத்தில், அக்கரைப்பேட்டை- கீச்சாங்குப்பத்துக்கு இடையே இச்சாலை அமைக்கப்பட்டால், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை மட்டுமல்லாமல் டாடா நகா் மீனவக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களும் அவசர காலத்தில் உடனடியாக தங்கள் பகுதியிலிருந்து வெளியேற முடியும்.

மேலும், நாகை துறைமுகத்திலிருந்து பாமாயில் உள்பட சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களும், நாகை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து வெளியூா்களுக்கு மீன்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களும், நாகை நகருக்குள் வராமலும், அக்கரைப்பேட்டை கிராமச் சாலையில் பயணிக்காமலும் நேரடியாக கிழக்குக் கடற்கரை சாலையை அடைய முடியும்.

எனவே, புதிய இணைப்புச் சாலையை தொலைநோக்குப் பாா்வையுடன், அக்கரைப்பேட்டையின் வடப்புறம் அமைக்க அரசு பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.