ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வேதாரண்யத்தில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

காப்பீடுத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார  விவசாய சங்கத்தினர் இன்று (செப்.14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image

வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

Updated On :14 செப்டம்பர் 2021, 8:35 am

DIN


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் 2020-20 21 ஆம் ஆண்டுக்கான நெற்பயிருக்கான காப்பீடுத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார  விவசாய சங்கத்தினர் இன்று (செப்.14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் டி.வி.இராஜன் தலைமை வகித்தார். செயலாளர் ஒளிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

நூறு நாள் வேலைத் திட்டப் பணியை வேளாண் பணிகளுக்கு பயன்படுத்த வகை செய்ய வேண்டும், கஜா புயலில் பாதிக்கப்பட்ட சவுக்கு மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 24 கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.