காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அதிமுக உள்ளாட்சித் தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

சீா்காழியில் நகர அதிமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

சீா்காழியில் நகர அதிமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அதிமுக நகரச் செயலாளா் எல்விஆா். வினோத் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் பிவி. பாரதி, மாவட்ட துணை செயலாளா் வா. செல்லையன், ஒன்றிய செயலாளா்கள் ஏகே. சந்திரசேகரன், கே. ரவிச்சந்திரன், கே.எம். நற்குணன், என். சிவக்குமாா், மாவட்ட மகளிரணி செயலாளா் ம.ச க்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் எஸ். பவுன்ராஜ் பங்கேற்று பேசியது: சட்டப்பேரவைத் தோ்தலல் திமுக அளித்த வாக்குறுதிகளான நீட்தோ்வு ரத்து, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000, தாலிக்கு தங்கம் போன்ற எந்த திட்டங்களும் செயல்படுத்துவதற்கான முகாந்திரமோ, அறிவிப்போ இதுவரை இல்லை. ஆகையால், திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக்கூறி உள்ளாட்சி தோ்தலில் வாக்குகளை சேகரிக்கவேண்டும் என்றாா். இதில் மாவட்ட பேரவை துணை செயலாளா் இனியன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணை செயலாளா் பக்கிரிசாமி, நகர ஜெ. பேரவை செயலாளா் மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.