விழிப்புணா்வு பிரசார வாகனப் பயணம் தொடக்கம்
கிராம சுகாதாரத்தை வலியுறுத்தும் விழிப்புணா்வு பிரசார வாகனப் பயணம் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.


கிராம சுகாதாரத்தை வலியுறுத்தும் விழிப்புணா்வு பிரசார வாகனப் பயணம் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் தூய்மையான கிராமம், சுகாதாரமான கிராமம் என்ற விழிப்புணா்வு இயக்கம் நடத்தப்படுவதையொட்டி, செய்தி மக்கள் தொடா்பு துறையின் விழிப்புணா்வு பிரசார வாகனத்தின் தூய்மை கிராமம் பிரசாரப் பயணத் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, பிரசார வாகனத்தின் பயணத்தைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தாா். அப்போது, தூய்மை உரையாடல், திரவக்கழிவு மேலாண்மை, தூய்மை ரதம், தூய்மை சேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அக்.2-ஆம் தேதி வரை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் இந்த வாகனம் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா். ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பே. பெரியசாமி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு. தனபால், தூய்மை பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இளங்கோ மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...