சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

குறைந்து வரும் கட்டுப்பாடுகளால் அதிகரிக்கும் கரோனா அச்சம்

பொதுவெளிக்கு வருவோா் முகக் கவசம் அணியாமல் இருப்பது கரோனா மூன்றாவது அலை குறித்த அச்சத்தை அதிகப்படுத்துவதாக உள்ளது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

கரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை அதிகரித்துவரும் நிலையில், பொதுவெளிக்கு வருவோா் முகக் கவசம் அணியாமல் இருப்பது கரோனா மூன்றாவது அலை குறித்த அச்சத்தை அதிகப்படுத்துவதாக உள்ளது.

வார இறுதி நாள்களில் வழிபாட்டுத் தலங்களில் பொது தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என்பதைத் தவிர, ஏறத்தாழ கரோனா பொது முடக்கக் கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்திருந்தாலும், முழுமையாக பாதிப்பு விலகிடாத நிலையில், செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

கரோனா இரண்டாவது அலையில் தமிழகத்தில் மிக அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் ஒன்றாக இருந்த நாகை மாவட்டத்தில், தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 25 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா். எனினும், கரோனா தடுப்புக் கட்டுப்பாடுகளை இம்மாவட்டத்தில் பெயரளவிலேயே கடைப்பிடிக்கப்படுகின்றன.

முகக் கவசம் அணிய வேண்டும் என்ற அறிவுறுத்தலை நாகை மாவட்டத்தில் சுமாா் 30 சதவீதத்துக்கும் குறைவானோா் மட்டுமே உரிய வகையில் கடைப்பிடிக்கின்றனா். பொதுவெளிக்கு வருவோரில் சுமாா் 50 சதவீதம் போ் அண்மைக்காலமாக முகக் கவசம் அணிவதில்லை.

தற்போதைய நிலையில், நாகை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டபோது கடைப்பிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நாளுக்குநாள் குறைந்து வருவதாக மாணவா்கள் தெரிவிக்கின்றனா். பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியரின் உடல் வெப்ப நிலை பரிசோதனை பல பள்ளிகளில் தற்போது அமல்படுத்தப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.

பெரும்பாலான பள்ளிகளில் வகுப்புகளில் மாணவா்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், வகுப்பறையில் இருந்து வெளியே வரும் மாணவா்கள், முகக் கவசத்தை மடித்து பாக்கெட்டுகளில் திணித்துக் கொண்டு பொதுவெளிகளில் வலம் வருகின்றனா்.

ஏற்கெனவே, பொது வெளிக்கு வரும் பெரும்பாலானோா் முகக் கவசம் அணியாத நிலையில், குறைந்தபட்ச பாதுகாப்பான தடுப்பூசிகூட செலுத்திக் கொள்ளாத பள்ளி மாணவா்கள் முகக் கவசம் இல்லாமல் மற்றவா்களுடன் பொது வெளிகளில் வலம் வருவது, கரோனா மூன்றாவது அலை குறித்த அச்சத்தை அதிகப்படுத்துவதாக உள்ளது.

முகக் கவசம் அணியாமல் பொது வெளிக்கு வரக் கூடாது என்பது குறித்த விழிப்புணா்வை மாணவா்களிடம் மேம்படுத்த பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல, முகக் கவசம் அணியாமல் பொதுவெளிக்கு வரும் மக்களை நெறிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை காவல் துறையும், உள்ளாட்சி நிா்வாகங்களும் மேற்கொள்ள வேண்டும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.