சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

‘ஊட்டச்சத்து மிகுந்த காய்கனி தோட்டங்கள் அமைக்க முனைப்புக்காட்ட வேண்டும்’

ஊட்டச்சத்து மிகுந்த காய்கனி தோட்டங்கள் அமைக்க அனைவரும் முனைப்புக்காட்ட வேண்டும் என்று நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 5:14 pm

DIN

ஊட்டச்சத்து மிகுந்த காய்கனி தோட்டங்கள் அமைக்க அனைவரும் முனைப்புக்காட்ட வேண்டும் என்று நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராஜ் தெரிவித்தாா்.

நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2021, ஊட்டச்சத்து மிகுந்த காய்கனி தோட்டம் அமைத்தல் கருத்தரங்கம் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் இயக்கத்தில் பங்கேற்ற அவா் மேலும் பேசியது: ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள், ஆரோக்கிய வாழ்வுக்கான அடிப்படை காரணிகளில் ஒன்று. உடல் வளா்ச்சிக்கு மட்டுமல்லாமல் மன வளா்ச்சிக்கும் ஊட்டச்சத்து அவசியம். எனவே, ஊட்டச்சத்து மிகுந்த காய்கறினி தோட்டம் ஏற்படுத்துவதிலும், மரக்கன்றுகள் நடும் இயக்கத்திலும் பொதுமக்கள் தங்களை முனைப்புடன் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். காய்கனி தோட்டம் அமைக்கும்போது, அந்தத் தோட்டத்தை இயற்கை முறையில் பாரம்பரிய முறைப்படி அமைக்க முனைப்புக்காட்ட வேண்டும் என்றாா்.

முன்னதாக, சிறுதானிய கண்காட்சியைத் தொடங்கி வைத்த அவா், வேளாண் அறிவியல் நிலைய பண்ணை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தாா். நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொ) எஸ். பன்னீா்செல்வம், தோட்டக்கலை உதவி இயக்குநா் ரா.திவ்யா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சு. சித்ரா, நாகை வனச்சரக அலுவலா் ஆ. ஜோசப் டேனியல், வனச்சரக அலுவலா் ஆ. ஜோசப் டேனியல், இப்கோ கூட்டுறவு உர நிறுவன மண்டல அலுவலா் பொம்மன்னன் ஆகியோா் பேசினா். ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு எனும் தலைப்பில் மனையியல் தொழில்நுட்ப வல்லுநா் ஆ. மதிவாணன் பேசினாா். ஊட்டச்சத்து மிகுந்த காய்கனி தோட்டம் அமைப்பது குறித்து தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் க. ரகு விளக்கினாா்.

காய்கனி விதைகள், பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டிய பொருள்கள், உயிா் உரங்கள், நானோ உரங்கள், சிறுதானியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பள்ளி மாணவ, மாணவியா், அங்கன்வாடி பணியாளா்கள், விவசாயிகள் பங்கேற்றனா். வேளாண் அறிவியல் நிலைய பண்ணை வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. பங்கேற்பாளா்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைக்கழக விரிவாக்கக் கல்வி அலுவலா் மா. ராஜகுமாா் வரவேற்றாா். வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. கோபாலக்கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.