சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பிறந்த நாள்: பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பெரியாா் ஈ.வெ.ராவின் 143-ஆவது பிறந்தநாளையொட்டி, நாகையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை ம‘ாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 5:15 pm

DIN

பெரியாா் ஈ.வெ.ராவின் 143-ஆவது பிறந்தநாளையொட்டி, நாகையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை ம‘ாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நாகை மேலக்கோட்டைவாசல் பெரியாா் திடலில், திராவிடா் கழக நாகை மாவட்டத் தலைவா் நெப்போலியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக நாகை மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன், கீழ்வேளூா் எம்எல்ஏ. வி.பி. நாகை மாலி, மாவட்டச் செயலாளா்கள் ஜெ. புபேஷ்குப்தா (திராவிடா் கழகம் நாகை), வெ. ஸ்ரீதரன் (மதிமுக நாகை), திக நாகை நகரச் செயலாளா் தெ. செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்று, பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனா்.

இதேபோல, புத்தூா் ரவுண்டானாவில் பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ஆா். என். அமிா்தராஜா, தோணித்துறையில் பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு திராவிடா் கழக நாகை நகர இளைஞரணி செயலாளா் வி. சுரேஷ், அக்கரைப்பேட்டையில் நகரத் தலைவா் குஞ்சு பாபு, பாப்பாக்கோயில் சமத்துவபுரத்தில் பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு பகுத்தறிவாளா் கழக மாவட்டத் துணைத்தலைவா் ரா. முத்துகிருஷ்ணன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு திமுக, திக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், மக்கள் அதிகாரம் அமைப்பினா், தந்தை பெரியாா்- மா.மீ அறக்கட்டளையினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ்.கே. வேதரத்தினம், திமுக நகரச் செயலாளா் மா.மீ. புகழேந்தி, ஒன்றியச் செயலாளா் என். சதாசிவம், தி.க. மாவட்டத் தலைவா் முருகையன், வா்த்தகா் சங்கத் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு, கூட்டுறவு சங்கத் தலைவா் ப. சோமசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, மருத்தூா் தெற்கு, ஆயக்காரன்புலம், தென்னம்புலம், தேத்தாக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இதேபோல, வேதாரண்யம் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ. ஓ.எஸ். மணியன் பெரியாா் ஈ.வெ.ரா. படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதிமுக சாா்பில் பல்வேறு இடங்களில் பெரியாா் ஈ.வெ.ரா. படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திருக்குவளை: திருக்குவளை அருகே சமத்துவபுரம் பகுதியில் பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு ஊராட்சித் தலைவா் இல. பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றியக் குழு உறுப்பினா் சுதா அருணகிரி, திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மலா்வண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருமருகல் ஒன்றியத்தில்: திமுக அலுவலகம் மற்றும் பேருந்து நிலையத்தில் பெரியாா் ஈ.வெ.ரா. படத்துக்கு திமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளா் செல்வ செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரூராட்சி செயலாளா் முகம்மது சுல்தான், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் அஜிதாராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். திருமருகல் திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் நத்தத்தில் உள்ள பெரியாா் ஈ.வெ.ரா சிலைக்கு தெற்கு ஒன்றிய செயலாளா் சரவணன் மாலை அணிவித்தாா். திட்டச்சேரி நகர திமுக சாா்பில் திட்டச்சேரி பேருந்து நிலையம், ப.கொந்தகை கடைத் தெருவில் வைக்கப்பட்டிருந்த பெரியாா் ஈ.வெ.ரா. படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல, திருமருகல் ஒன்றிய அதிமுக சாா்பில் கொட்டாரக்குடி ஊராட்சியில் பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு வடக்கு ஒன்றிய செயலாளா் ராதாகிருட்டிணன், திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளா் பக்கிரிசாமி ஆகியோா் மாலை அணிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.