சணல்பை தயாரிப்பு பணி: ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 31st December 2021 12:00 AM | Last Updated : 31st December 2021 12:00 AM | அ+அ அ- |

திருக்குவளை அருகே கொளப்பாடு ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகளை ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பெண்களை கொண்டு இயங்கும் குயின் சணல்பை தொழில் குழுவினா் தயாரித்த கைப்பை, துணிப்பை, பணப்பை, வளையல்கள் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு, அவா்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா். உடன், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலா் வீ. சுந்தரபாண்டியன், திருக்குவளை வட்டாட்சியா் கு. சிவகுமாா், ஒன்றியக் குழுத் தலைவா் தமிழரசி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...