முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
வேதாரண்யம் கடலோரப் பகுதியில் கனமழை
By DIN | Published On : 31st December 2021 11:45 AM | Last Updated : 31st December 2021 11:45 AM | அ+அ அ- |

மழைக்கு முன்பாக வாய்மேடு பகுதில் சூழ்ந்த கார்மேகம்,
வேதாரண்யம்: நாகை மாவட்டம்,வேதாரண்யம் பகுதி கடலோரக் கிராமங்களில் இன்று (டிச.31) காலை 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழைப் பொழிவு ஏற்பட்டது.
காற்றுக் கழற்சி காரணமாக கடலோரப் பகுதியில் மழைப் பொழிவு ஏற்பட்டு வருகிறது. வேதாரண்யம் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் லேசான மழைப் பொழிவு ஏற்பட்டடது.
இந்த நிலையில், காலை 8 மணி முதல் 10 மணி வரை கோடியக்கரை தொடங்கி தெற்கு கடலோரக் கிராமங்களில் கனமழை ஏற்பட்டது.
புஷ்பவனம், கரியாப்பட்டனம் ,வாய்மேடு, ஆயக்காரன்புலம் பகுதிக்கு தெற்கு பகுதி கிராமங்களில் அதிக அளவில் மழை உணரப்பட்டது, பரவலான மழை தொடர்ந்து வருகிறது.