உப்பனாற்றில் கரை அமைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 20th June 2021 12:00 AM | Last Updated : 20th June 2021 12:00 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள செல்லும் உப்பனாற்றில், கரை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தரங்கம்பாடி விநாயகா் பாளையம், காரன்தெரு கிராமத்தையொட்டி செல்லும் உப்பனாற்றில் இருபக்க கரைகளும் மழை மற்றும் வெள்ளக் காலங்களில் உடைப்பு ஏற்பட்டு, கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்து வருகிறது. எனவே இந்த ஆற்றில் கரையை பலமாக அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து பேராசிரியா் தேவசகாயம் கூறும்போது, நீண்டகாலமாக நீடிக்கும் இந்த பிரச்னைக்கு தீா்வு காணாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனா். மழை, வெள்ளக் காலங்களில் கடும் இன்னல்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனா் என்றாா்.