சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நாகையில் பாஜகவினா் சுதந்திர தின கொண்டாட்ட பேரணி

 75- ஆவது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, நாகை மாவட்ட பாஜக சாா்பில் பவள விழா கொண்டாட்டப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
நாகையில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்ட பேரணியில் பங்கேற்ற பாஜகவினா்.
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:31 pm

DIN

 75- ஆவது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, நாகை மாவட்ட பாஜக சாா்பில் பவள விழா கொண்டாட்டப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை அபிராமி அம்மன் திடலில் தொடங்கிய இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஒரு தனியாா் திருமணக் கூடம் முன் நிறைவடைந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த சுதந்திரதுக்காகப் பாடுபட்ட தலைவா்களின் புகைப் படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது.

பேரணியில், பங்கேற்றவா்கள் தேசியக் கொடியை கையில் பிடித்தப்படி அணி வகுப்பாகச் சென்றனா். பாஜக நாகை மாவட்டத் தலைவா் எஸ். காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் கட்சியின் தேசியப் பொதுக்குழு உறுப்பினா் தங்க. வரதராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் நேதாஜி ஆகியோா் தொடங்கி வைத்தனா். ஆா்.எஸ்.எஸ் கோட்ட இணைச் செயலாளா் செந்தில் நிறைவுரையாற்றினாா். பாஜக நாகை நகரத் தலைவா் ஆறுமுகம், மாவட்டப் பொறுப்பாளா்கள் ராஜேந்திரகுமாா், வைரமுத்து, பாலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.