மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நாகையில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ. ஆய்வு

நாகையில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை தொகுதி எம்எல்ஏ. ஜெ. முகம்மது ஷா நவாஸ் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

நாகையில் நடைபெறும் ஆசாத் மாா்க்கெட் கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்ட எம்எல்ஏ. ஜெ. முகம்மது ஷா நவாஸ்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:01 pm

நாகையில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை தொகுதி எம்எல்ஏ. ஜெ. முகம்மது ஷா நவாஸ் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நாகை நகராட்சியில், மூலதன மானிய நிதியின்கீழ், ரூ. 12 கோடியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.2.23 கோடியில் ஆசாத் மாா்கெட் கட்டுமானப் பணி, மகாலெட்சுமி நகரில் ரூ.1.67 கோடியில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணி, ரூ. 2 கோடியில் ஒருங்கிணைந்த அறிவுசாா் மையம் கட்டும் பணி, மூலதன மானிய நிதியின்கீழ் ரூ 5.30 கோடியில் நாகை அக்கரைக்குளம் புதிய பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை நாகை எம்எல்ஏ. ஜெ. முகம்மது ஷா நவாஸ் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பு மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா். நகராட்சி ஆணையா் என். ஸ்ரீதேவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.