கீழையூர் அருகே எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, கீழையூர் அருகே ஈசனூர் பகுதியிலுள்ள அவரது மார்பளவு திருவுருவச் சிலைக்கு திங்கள்கிழமை மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, கீழையூர் அருகே ஈசனூர் பகுதியிலுள்ள அவரது மார்பளவு திருவுருவச் சிலைக்கு திங்கள்கிழமை மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாளை முன்னிட்டு கீழையூர் மேற்கு ஒன்றிய அஇஅதிமுக சார்பில் ஈசனூர் பகுதியிலுள்ள எம்ஜிஆர்-யின் மார்பளவு திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்விற்கு நாகை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் எஸ்.பால்ராஜ் தலைமை வகித்தார். கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பாலை.கே.எஸ்.எஸ். செல்வராஜ், மாவட்ட இணைச் செயலாளர் என்.மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விவசாயப் பிரிவு ஒன்றியத் தலைவர் எல். சுப்பிரமணியன், ஊராட்சி மன்றத் தலைவர் ஈசனூர் தனலெட்சுமி வெங்கடபதி, அண்ணா தொழிற்சங்க ஒன்றியச் செயலாளர் வீ. திருஞானசம்பந்தம், ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் பீ. அந்தோணி ராஜ், மகளிரணி ஒன்றியத் தலைவர் டெல்பி மார்க்ரெட் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...