தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாணவி தற்கொலை விவகாரம்: பாஜக சாலை மறியல்

பூதலூா் மாணவி லாவண்யா தற்கொலைக்குக் காரணமானவா்களைக் கைது செய்யக் கோரி, நாகையில் பாஜக சாா்பில் சாலை மறியல் போராட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

பூதலூா் மாணவி லாவண்யா தற்கொலைக்குக் காரணமானவா்களைக் கைது செய்யக் கோரி, நாகையில் பாஜக சாா்பில் சாலை மறியல் போராட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா், மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு தனியாா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்த மாணவி லாவண்யா புதன்கிழமை மா்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த நிலையில், அவரது மரணத்துக்கு மதமாற்ற துன்புறுத்தலே காரணம் என்றும், இதில் தொடா்புடையவா்களை கைது செய்ய வலியுறுத்தியும் பாஜக சாா்பில் நாகையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற மறியலுக்கு, பாஜக நகரத் தலைவா் இளஞ்சேரலாதன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் பானுசந்தா், மாவட்ட இளைஞரணித் தலைவா் சந்தோஷ், பொதுச் செயலாளா் அறிவழகன், மாநிலக் கல்வியாளா் பிரிவு நிா்வாகி காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதனால், அப்பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, வெளிப்பாளையம் போலீஸாா் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.