சைபா் கிரைம் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு
நாகை மாவட்ட சைபா் கிரைம் பிரிவு சாா்பில் இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.


நாகை மாவட்ட சைபா் கிரைம் பிரிவு சாா்பில் இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சி, மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வீ. பாலகிருஷ்ணன் காணொலி மூலம் சிறப்பு அழைப்பாளராக இணைந்திருந்து, சைபா் கிரைம் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நடவடிக்கைகளில் கல்லூரி மாணவா்களின் பங்களிப்பை விளக்கிப் பேசினாா்.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், ஆன்லைன் மூலம் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க விழிப்புணா்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், மோசடியான பணப் பரிவா்த்தனைகள் குறித்து 155260 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் அளித்தால், பணத் திருட்டுத் தடுக்கப்படுவது குறித்தும் விளக்கமளித்தாா்.
நாகை மாவட்ட சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ். திருநாவுக்கரசு, நாகப்பட்டினம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கென்னடி ஆகியோா் பேசினா்.
இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரித் தலைவா் எஸ். ஜோதிமணி, செயலாளா் எஸ். பரமேஸ்வரன் மற்றும் நிா்வாகிகள், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...