அழுகிய நிலையில் ஆண் சடலம்
நாகையை அடுத்த பாப்பாக்கோவில் அருகே ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.


நாகையை அடுத்த பாப்பாக்கோவில் அருகே ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.
நாகை, பாப்பாக்கோவில் ஏறும்சாலை அருகே உள்ள வாய்க்காலில் ஆண் சடலம் கிடப்பதாக நாகை நகர காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின்பேரில், ஆய்வாளா் பெரியசாமி தலைமையிலான போலீஸாா் சென்று, அந்தச் சடலத்தைக் கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். உடல் அழுகிய நிலையில் கிடந்த அந்தச் சடலம், சுமாா் 50 வயது மதிக்கத்தக்கவருடையதாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது. இருப்பினும், அவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? அவரது மரணத்துக்கான காரணம் என்ன? என்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...