வேதாரண்யம்: சுமையுந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து ஓட்டுநர் பலி

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கட்டுப்பாட்டை இழந்த  சுமையுந்து (லோடு ஆட்டோ) இன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து நேர்ந்த விபத்தில் அதன் ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே பலியானர்.
ஆற்றுக்குள் கவிழ்ந்த சுமையுந்து.
ஆற்றுக்குள் கவிழ்ந்த சுமையுந்து.

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கட்டுப்பாட்டை இழந்த  சுமையுந்து (லோடு ஆட்டோ) இன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து நேர்ந்த விபத்தில் அதன் ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே பலியானர்.

மருதூர் தெற்கு, ஆண்டியப்பன்காடு (தகட்டூர் கடை வீதி அருகே) பகுதியைச் சேர்ந்தவர் முத்துலிங்கம் மகன் செந்தில்குமார் (40). வேன் ஓட்டுநரான இவர், சொந்தமாக சுமையுந்து வைத்து ஓட்டிவந்தார்.

இன்று முற்பகலில் தகட்டூரில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, தென்னடார்  கிராமத்துக்கு சென்றுக் கொண்டிருந்தார். பஞ்சாதிக்குளம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த சுமையுந்து கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் செல்லும் முள்ளியாற்றுக்குள் கவிழ்ந்தது. 

தகவல் அறிந்த பொது மக்கள் தீயணைப்புத் துறை வீரர்கள் செந்தில்குமாரை சடலமாக மீட்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com