திருக்குவளையில் கலைஞர் பிறந்த நாள் விழா

திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த  நாள் விழா  வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருக்குவளையில் கலைஞர் பிறந்த நாள் விழா

திருக்குவளை: முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று  கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதேபோல் நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த  நாள் விழா  வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருக்குவளை கருணாநிதி இல்லத்தில் நடைபெற்ற கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் ஆகியோர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். 

அதனைத் தொடர்ந்து கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி,  தலைமை செயற்குழு உறுப்பினர் இல. மேகநாதன், கீழையூர் ஒன்றிய செயலாளர் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன், திருக்குவளை ஊராட்சி மன்ற தலைவர் இல.பழனியப்பன் மற்றும் திமுக ஒன்றிய பேரூர் கழக  பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

முன்னதாக திருக்குவளை சமத்துவபுரத்தில் தொகுப்பு வீடுகள் புதுப்பிக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருக்குவளையில் இருந்து மன்னார்குடி வரை புதிய பேருந்து சேவை துவக்கி வைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com