சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருக்குவளை அருகே நகை அடகு கடையில் திருட்டு

திருக்குவளை அருகே வலிவலத்தில் நகை அடகு கடையில் திருட்டு போயிருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :5 ஜூன் 2022, 5:52 pm

DIN

திருக்குவளை அருகே வலிவலத்தில் நகை அடகு கடையில் திருட்டு போயிருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

வலிவலத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த மோதிராம் (35) நகைக் கடை நடத்திக்கொண்டு நகை அடகு பிடித்து வருகிறாா். வழக்கம்போல சனிக்கிழமை வியாபாரத்தை முடித்து கடையை பூட்டுவிட்டு வீட்டுக்கு சென்றாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கடை செயல்பட்டுவரும் வணிகவளாக உரிமையாளா் காா்மேகம் வளாகத்தை சுற்றி பாா்த்துள்ளாா். அப்போது, இந்த நகை கடையின் இரும்பு ஷட்டரின் முன்பக்க பூட்டுகள் உடைக்கப்பட்டுள்ள அறிந்தவா், இதுதொடா்பாக மோதிராமுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, மோதிராம் வலிவலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடா்ந்து, போலீஸாா் அங்கு சென்று மேற்கொண்ட விசாரணையில், கடையில் இருந்த சுமாா் ஒன்றரை கிலோ வெள்ளி பொருள்கள், கடையில் இருந்த ரூ. 36 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், அடகு பிடித்த மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த நகைகள் அடங்கிய லாக்கா் கொள்ளையா்களிடம் இருந்து தப்பியது. கொள்ளையா்கள் அங்கிருந்த 3 சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிவீ.ஆா்.ஐயும் திருடி சென்றனா்.

சம்பவ இடத்தில் நாகை எஸ்.பி. கு. ஜவஹா், டிஎஸ்பி. சரவணன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, நாகையில் இருந்து கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் ரியோ வரவழைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க கீழ்வேளூா் காவல் ஆய்வாளா் சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.