மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வேதாரண்யத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் 78 மாதமாக வழங்காமல் உள்ள அகவிலைப்படி உயர்வுகளை உடனே வழங்க வேண்டும் என்பன போன்ற 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :14 ஜூன் 2022, 9:45 am

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் 78 மாதமாக வழங்காமல் உள்ள அகவிலைப்படி உயர்வுகளை உடனே வழங்க வேண்டும் என்பன போன்ற 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக நலச்சங்கம் சார்பில் இன்று ( ஜூன்.14) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரண்யம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக  நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் தென்னடார் குழந்தைவேலு, வேதரத்தினம், முத்துக்கண்ணு, தியாகராஜன், வேலாயுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க உறுப்பினர்கள் 140 பேர் தமிழக முதல்வருக்கு அஞ்சலகம் வழியாக தனித்தனியே மனுக்கள் அனுப்பினர்.

வேதாரண்யத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அரசு  போக்குவரத்துத் தொழிலாளர்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.