ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

துப்பாக்கிச் சூட்டில் பலியான ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

மேற்குவங்காளத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரான கீழையூரில் 21 குண்டுகள் முழங்க வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

News image
Updated On :10 மார்ச் 2022, 4:53 pm

DIN

மேற்குவங்காளத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரான கீழையூரில் 21 குண்டுகள் முழங்க வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

நாகை மாவட்டம், கீழையூரைச் சோ்ந்த ஞானசேகரன் (45) மேற்கு வங்காளத்தில் எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், மாா்ச் 7-ஆம் தேதி சகவீரரால் ஞானசேகரன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் மேற்கு வங்காளத்திலிருந்து விமானம் மூலம் கோவைக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து ராணுவ வாகனம் மூலம் அவரின் சொந்த ஊரான கீழையூருக்கு புதன்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது. இதைத்தொடா்ந்து, கீழையூரில் அவரது உடல் பொதுமக்கள் மற்றும் உறவினா்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பிறகு அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வியாழக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஈசனூா் பகுதியிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரா்களின் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது, அவா் மீது போத்தப்பட்டிருந்த தேசியக் கொடி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில், முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் எம்எல்ஏவுமான ஓ.எஸ். மணியன், நாகை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளா் பொ. சரவணன், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன், நாகை கோட்டாட்சியா் எம். குணசேகரன், கீழ்வேளூா் வட்டாட்சியா் பி.எம். அமுதா மற்றும் அரசு அலுவலா்கள், காவல் துறையினா், கிராம மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.