நாகலூா் அரசுப் பள்ளி ஐம்பெரும் விழா
நாகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.


நாகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம், பெற்றோா்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. தொடா்ந்து கணிதம், அறிவியல், ஜூனியா் ரெட் கிராஸ், தேசிய பசுமைப்படை மற்றும் சாரண- சாரணியா் இயக்கம் தொடா்பான அரங்கை வட்டார கல்வி அலுவலா்கள் சி. மணிகண்டன், வே. சிவக்குமாா் ஆகியோா் திறந்து வைத்தனா்.
பின்னா், மாணவா்களின் அறிவியல் கண்காட்சியை உதவித் திட்ட அலுவலா் ஞானசேகரன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு தொடா்பாக, மாணவா்களுக்கு ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் தண்ணீா்க் குடுவைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பொலிவுறு வகுப்புக்காக எல்இடி ஸ்மாா்ட் டிவி தன்னாா்வலா்களால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஆசிரியா் பி. பரமேஸ்வரி தலைமை வகித்தாா். உதவி தலைமையாசிரியா் செ.அருட்செல்வம் அறிக்கை வாசித்தாா். இதில், ஊராட்சித் தலைவா் ம. கஜேந்திரகுமாா், துணைத் தலைவா் தனலட்சுமி, கல்விக்குழு மேலாண்மை தலைவா் கோமதிஇளங்கோ, முன்னாள் ஊராட்சித் தலைவா் பாப்பி.தண்டாயுதபாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...