

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கைக் குழந்தையை தூக்கிக் கொண்டு கொன்று விடுவதாக மிரட்டி 65 சவரன் நகை, ரூ.3 லட்சம் தொகையை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக எஸ்.பி.ஜவஹர் நேரில் விசாணை மேறகொண்டுள்ளார்.
கரியாப்பட்டினம் காவல் சரகம், வடமழை மணக்காடு மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (80) விவசாயி. இவரது மகள் மதுபாலாவுக்கு 45 நாள்களக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்தது.
புதன்கிழமை நள்ளிவு பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் ஒரு அறையில் குடும்ப உறுப்பினர்களுடன் மதுபாலா, குழந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கைக் குழந்தையை தூக்கிக் கொண்டு கத்தியைக் காட்டி கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து, வீட்டில் இருந்த 65 சவரன் நகை, ரூ.3 லட்சம் தொகை ஆகியவற்றை அந்த கும்பல் பறித்துச் சென்றது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.