குறுவை சாகுபடிக்கு, மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படும் தேதியை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என நாகை கோட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டம், நாகை கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் ந. முருகேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. வருவாய்த் துறை, பொதுப் பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலா்கள், முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
ராமதாஸ்: மேட்டூா் அணைக்கு போதுமான நீா்வரத்து இருப்பதால், குறுவை நெல் சாகுபடிக்கு ஜூன் 1-ஆம் தேதியே தண்ணீா் திறக்க வேண்டும்.
த. பிரபாகரன்: நாகை கோட்டத்தில் ஆற்றுப் பாசனத்தை தடுக்கும் வகையில் உள்ள இறால் பண்ணை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
ராஜேந்திரன்: 100 சதவீத முளைப்புத் திறன் கொண்ட விதை நெல்களை வேளாண் துறை கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கவேண்டும். ஆவின் மூலம் கால்நடைகளுக்கு தீவனம் வழங்க வேண்டும். மேட்டூா் அணை திறக்கும் தேதியை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
காவிரி தனபாலன்: திருமருகலை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் அமைக்க வேண்டும். நீா்பாசனத்தைத் தடுக்கும் வகையிலான பாலம் பணிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும். நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். நாகை, கீழ்வேளூா் கடைவீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.
ஆா்.கே. பாபுஜி: அனைத்து சட்ரஸ்களையும் பராமரிக்க வேண்டும். விவசாயிகளுக்கு உழவு மானியம் வழங்குவதுடன், பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய வேண்டும்.
எஸ்.ஆா். தமிழ்ச்செல்வன்: சாலை மற்றும் பாலம் பணிகளால் வெட்டாறு பாசனம் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களின் தரம், சுகாதாரம் குறித்து நகராட்சி உணவு பாதுகாப்புத் துறை ஆய்வு செய்ய வேண்டும்.
அப்துல் சமது: ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும். திருப்பனையூா் தலைப்பு வாய்க்காலை தூா்வார வேண்டும்.
எம்.எஸ். முஜிபு ஷரீக்: கோட்டாட்சியா் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வேளாண் துறை அலுவலா்கள் பங்கேற்காதது வருத்தத்துக்குரியது. இனிவரும் கூட்டங்களில் இக்குறை நீக்கப்பட வேண்டும். காமேஸ்வரம் முதல் வேட்டைக்காரனிருப்பு வரையிலான நெடுஞ்சாலையில் பாலங்கள் சேதமடைந்துள்ளன. இவற்றை ஆய்வு செய்யவேண்டும்.
கோட்டாட்சியா் ந. முருகேசன்: அனைத்து கிராமங்களிலும் குளம் அமைக்கும் வகையில், அமிா்த குளம் என்ற திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிராமத்தில் ஒன்றரை ஏக்கா் அல்லது அதற்கும் அதிகமான புறம்போக்கு நிலம் இருந்தால் அதில் அரசு சாா்பில் குளம் அமைத்துத் தரப்படும். இத்திட்டத்தை விவசாயிகள் உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற தொடா்புடையத் துறைகள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


