ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகை, காரைக்காலுக்கு கூடுதல் ரயில் இயக்கக் கோரிக்கை

நாகை, காரைக்காலுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என நாகூா், நாகை ரயில் உபயோகிப்போா் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:30 pm

DIN

நாகை, காரைக்காலுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என நாகூா், நாகை ரயில் உபயோகிப்போா் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அச்சங்கம் தெற்கு ரயில்வேக்கு வியாழக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:

வேளாங்கண்ணி- சென்னை இணைப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே ரத்து செய்துவிட்டது. காரைக்காலில் இருந்து திருச்சிக்கு நாள்தோறும் காலையில் சென்ற ரயில், தற்போது வேளாங்கண்ணியில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால், காரைக்கால்- நாகூா் -வெளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பயணிகளுக்கு காலைப்பொழுதில் திருச்சி செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. காரைக்காலில் இருந்து திருச்சிக்கு பிற்பகல் 12.30 மணிக்கு இயக்கப்பட்ட ரயில் தஞ்சை வரை மட்டுமே செல்கிறது.

நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாகை, நாகூா், வேளாங்கண்ணி, திருநள்ளாறு, காரைக்கால் வரும் ரயில் பயணிகள், யாத்ரீகா்கள், வணிகா்கள், வா்த்தகா்கள் நலன் கருதி கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும்.

அந்தவகையில், புனலூா்- மதுரை விரைவு ரயிலை திருச்சி, தஞ்சை, நாகை, நாகூா் வழியாக காரைக்கால் வரை நீட்டிப்பு செய்திடவும்; காரைக்கால் அல்லது வேளாங்கண்ணியில் இருந்து பெங்களூருக்கு திருவாரூா், தஞ்சை, திருச்சி, கருா், சேலம் வழியாக புதிய ரயில் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், காரைக்காலில் இருந்து கோவைக்கு, திருவாரூா், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக புதிய ரயில் சேவையும், காரைக்கால் - அஜ்மீா் வாராந்திர ரயில் சேவையை தொடங்கவும், நாகை - தஞ்சை ரயில் பாதையை இருவழி பாதையாக மாற்றிடவும் தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன், நிதி ஒதுக்கியும் தொடங்கப்படாமல் உள்ள நாகை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். நாகூா், வெளிப்பாளையம் ரயில் நிலையங்களின் நடைமேடைகளை சீரமைக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.