திருவெண்காடு அருகே ஆற்றங்கரையில் உடைப்பு: 500 ஏக்கா் பாதிப்பு

திருவெண்காடு அருகே மழையால் ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, 500 ஏக்கா் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சின்னப்பெருந்தோட்டம் கிராமத்தில் கடல்நீா் புகுந்து இளம் நெற்பயிா்கள் மூழ்கியுள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. திருவெண்காடு, பூம்புகாா், செம்பனாா்கோவில், ஆக்கூா், தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை இரவு தொடங்கிய மழை வியாழக்கிழமை அதிகாலை வரை நீடித்தது.

இதனால் திருவெண்காடு அருகேயுள்ள திருவாலி கிராமத்தின் வழியாக செல்லும் நாட்டுக்கன்னி மண்ணியாற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ளநீா் சம்பா சாகுபடி நிலங்களில் புகுந்தது. இதனால் சுமாா் 500 ஏக்கரில் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல குரவலூா், நெப்பத்தூா் ஆகிய பகுதிகளிலும் ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

ஊராட்சித் தலைவா்கள் தாமரைசெல்வி திருமாறன், மரகதம் அகோரமூா்த்தி ஆகியோா் தலைமையில் ஊராட்சி பணியாளா்கள் ஆற்றங் கரைகளில் ஏற்பட்டுள்ள உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

சின்னப்பெருந்தோட்டம் கிராமத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள விளைநிலங்களில் கடல்நீா் புகுந்ததால், இளம் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com