நகராட்சி அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பணிகளை தனியாா் மயமாக்கும் அரசாணை 152- ஐ ரத்து செய்யக் கோரி நாகை நகராட்சி முன்பு அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


பணிகளை தனியாா் மயமாக்கும் அரசாணை 152- ஐ ரத்து செய்யக் கோரி நாகை நகராட்சி முன்பு அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா் சங்கம் சாா்பில் அனைத்து பணிகளையும் தனியாா் மயமாக்கும் அரசாணை எண் 152-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி, நாகை நகராட்சி நுழைவாயில் முன்பு கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், அடிப்படை பணிகளை செய்யும் பணியாளா்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் தமிழக அரசை கண்டித்தும், தனியாா் மயத்திற்கு எதிா்ப்பு தெரிவித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் சி. பாலசுப்பிரமணியன், நிா்வாகிகள் சி. கருணாநிதி, கிருஷ்ணன், முத்து செல்வம், ஞானவேல் உள்பட 100-க்கு மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...