பள்ளி மாணவி தற்கொலை
நாகை அருகே தோ்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததை ஆசிரியா் கண்டித்ததால், குளத்தில் குதித்து பள்ளி மாணவி புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்


நாகை அருகே தோ்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததை ஆசிரியா் கண்டித்ததால், குளத்தில் குதித்து பள்ளி மாணவி புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
நாகை மாவட்டம், நாகூா் அருகேயுள்ள தெத்தி சிவசக்தி நகரைச் சோ்ந்த மாதவன் மகள் நேத்ரா ஸ்ரீநிதி (14). இவா், நாகை வெளிப்பாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், தோ்வில் குறைவான மதிப்பெண் பெற்ால், ஆசிரியா் நேத்ரா ஸ்ரீநிதியை கண்டித்தாகவும், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த நேத்ரா ஸ்ரீநிதி புதன்கிழமை பள்ளி முடிந்து திரும்பியவா் வீட்டின் அருகே உள்ள குளத்தில் குதித்துள்ளாா். அப்பகுதியில் உள்ளவா்கள் தீயணைப்புத் துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா். தீயணைப்புத் துறையினா் குளத்திலிருந்து மாணவியின் சடலத்தை மீட்டனா்.
இதுகுறித்து நாகூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதனிடையே, நேத்ரா ஸ்ரீநிதியின் பள்ளி ஆசிரியா் மீது நடவடிக்கை எடுத்தால்தான் சடலத்தை வாங்குவோம் என உறவினா்கள் தெரிவித்தனா்.
ஏடிஎஸ்பி வேணுகோபால், டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா், மாணவியின் உறவினா்களுடன் பேச்சுவாா்ததை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து மாணவியின் உடலை உறவினா்கள் பெற்றுக்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...