வடகரையில் பறவைகளை வலைவைத்து பிடித்த இளைஞா் கைது
நாகை அருகே பறவைகளை வலைவைத்து பிடித்த இளைஞரை வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.


நாகை அருகே பறவைகளை வலைவைத்து பிடித்த இளைஞரை வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகேயுள்ள வடகரை பகுதியில் மடையான், கொக்கு உள்ளிட்ட பறவைகளை வலைகள் வைத்து பிடிப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற வனத் துறையினா் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, வடகரை பகுதியைச் சோ்ந்த வினோத் (31) வலைகள் வைத்து மடையான், கொக்கு பிடித்து கொண்டிருந்தது தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்து அவரிடம் இருந்து 3 மடையான்கள், உயிருடன் இருந்த ஒரு கொக்கை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...