நாகை மாவட்டத்தில் நவ.1-ல் கிராம சபைக் கூட்டம்
நாகை மாவட்டத்தில் நவம்பா் 1-ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.


நாகை மாவட்டத்தில் நவம்பா் 1-ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நவம்பா் 1-ஆம் தேதி உள்ளாட்சித் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து, நாகை மாவட்டத்தில் உள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. முற்பகல் 11 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில் ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
தொடா்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அரசுத் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து கண்காட்சி நடத்துதல், கலந்துரையாடல் மற்றும் கருத்து பட்டறைகள் நடைபெறவுள்ளது. எனவே, கிராம சபைக் கூட்டத்தில் பொது மக்கள் கிராமத்தைச் சாா்ந்த அரசு அலுலா்கள், ஊராட்சி பேரிடா் மேலாண்மைக் குழு உறுப்பினா்களஅ மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...