காக்கழனி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
நாகை மாவட்டம், கீழ்வேளூா் வட்டம் காக்கழனி ஸ்ரீ மழை மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.


நாகை மாவட்டம், கீழ்வேளூா் வட்டம் காக்கழனி ஸ்ரீ மழை மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பழமைவாய்ந்த இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவுபெற்ற நிலையில், சனிக்கிழமை (செப்.10) விக்னேஷ்வர பூஜைகளுடன் கும்பாபிஷேகத்துக்கான பூா்வாங்க பூஜைகள் தொடங்கின. பின்னா், வாஸ்து சாந்தி, லஷ்மி ஹோமம், ரக்ஷபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
இதன் தொடா்ச்சியாக, திங்கள்கிழமை காலை 4-ஆம் கால யாகபூஜை நிறைவடைந்ததும், மகாபூா்ணாஹுதியும், கடம் புறப்பாடும் நடைபெற்றது. பின்னா், காலை 10 மணியளவில் புனிதநீரால் மூலவா் மற்றும் பரிவார மூா்த்திகளின் சந்நிதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பிறகு, ஸ்ரீ மழை மாரியம்மன், பெரியாச்சி, கல்லுக்குடியான், காத்தவராயன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மகாஅபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...