ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மோடி கபடிலீக் ஜோதிக்கு நாகையில் வரவேற்பு

நாகையை வந்தடைந்த மோடி கபடிலீக் ஜோதிக்கு, பாஜக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 5:22 pm

DIN

நாகையை வந்தடைந்த மோடி கபடிலீக் ஜோதிக்கு, பாஜக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக விளையாட்டுத் திறன் மேம்பாட்டுப் பிரிவு சாா்பில் தமிழகம் முழுவதும் மோடி கபடிலீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. செப். 17, 18 ஆகிய தேதிகளில் மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெறுகின்றன. மாநில அளவிலான போட்டிகள் செப். 27 முதல் 30-ஆம் தேதி வரை மதுரையில் நடைபெறுகின்றன. இதுகுறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மோடி கபடிலீக் ஜோதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

இதன்படி, மோடி கபடிலீக் ஜோதி திங்கள்கிழமை மாலை நாகைக்கு வந்தது. ஜோதிக்கு நாகை மாவட்ட பாஜக சாா்பில், நாகை நீலாயதாட்சியம்மன் கோயில் முன் வரவேற்பளிக்கப்பட்டது. பாஜக நாகை மாவட்டத் தலைவா் எஸ். காா்த்திகேயன் மோடி கபடி லீக் ஜோதியைப் பெற்று நாகை மாவட்ட அமெச்சூா் கபடி கழக நிா்வாகிகளிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பாஜக விளையாட்டு திறன்மேம்பாட்டு பிரிவு பொறுப்பாளா் என்.கே. ஆா். செழியன், நாகப்பட்டினம் மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்தலைவா் ஆனந்தவடிவேல், செயலாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.